கேன்ஸ் திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கேன்ஸ் திரைப்பட திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகுச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான கேன்ஸ் திரைப்பட திருவிழா கடந்த 16ம்தேதி(நேற்று) துவங்கி வரும் 27ம்தேதிவரை நடைபெறுகிறது.
இந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட படங்கள் பங்கேற்கும்.
அந்த வகையில் இந்தாண்டு மிட்நைட் ஸ்க்ரீனிங் என்னும் பிரிவில் இந்தியாவிலிருந்து இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்களின் கென்னடி என்னும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.
இந்நிலையில் இவ்விழா நேற்று துவங்கிய நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் அவர்களின் தலைமையில் இந்தியாவினை சேர்ந்த குழு கலந்துக்கொண்டது.
மத்தியஅமைச்சர் எல்.முருகன் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையினை அணிந்து செம கெத்தாக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் #G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்.
— Dr.L.Murugan (@Murugan_MoS) May 17, 2023
(2/2)@EshaGuptaOffl #Cannes2023 #IndianCinema #G20India pic.twitter.com/BykWFH9OMX