
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை
செய்தி முன்னோட்டம்
நேற்று(ஆகஸ்ட் 12) உடல்நலக்குறைவு காரணமாக தர்மபுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இன்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேல் வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவருக்கு வலி நிவாரணிகள் மற்றும் திரவ மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் பெங்களூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம், "அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மேல் வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளது.
டிஜிஓக்
அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது
"அவருக்கு வலி மற்றும் திரவ நிவாரணிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" என்று மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிருஷ்ணகிரியில் நடைபெறும் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சேலத்தில் இருந்து தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் காரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு அஜீரண கோளாறு மற்றும் வாயு தொல்லை இருப்பதாக கூறப்பட்டது.