Page Loader
சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. மீண்டும் மினி பஸ் வரவுள்ளது

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. மீண்டும் மினி பஸ் வரவுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2024
11:34 am

செய்தி முன்னோட்டம்

மினி பஸ் என்பது பொதுமக்களுக்கு ஒரு வரமாகவே இருந்தது. ஆனால் தமிழகத்தில் நடைபெற ஆட்சி மாற்றங்கள் காரணமாகவும், போக்குவரத்து துறையின் நிதி பற்றாக்குறை காரணமாகவும் பல ஊர்களில் அதன் செயல்பாடு குறைக்கப்பட்டது. அதிலும் தலைநகர் சென்னையில் அது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மினி பஸ் சேவைக்கான அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னையை பொறுத்த வரை திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, ஷோலிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை,கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மீண்டும் மினி பஸ்!