
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்
செய்தி முன்னோட்டம்
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இன்று சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அதன்போது, மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, 63 பணிகளில் 40 பணிகள் தற்போது உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு, மீதமுள்ள 23 பணிகள் நிறைவேற்று செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு கேள்விக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் #Sekarbabu #Minister #Madurai #MeenatchiAmmanTemple #SellurRaju #ADMK #News18Tamilnadu… pic.twitter.com/FRnGtEcxJI
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 9, 2024