சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு
சென்னை வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் பகுதியிலுள்ள மார்பளவு எம்ஜிஆர் சிலையின் முகத்தில் யாரோ சிலர் சிகப்பு பெயிண்ட் ஊற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த சிலையினை அவமரியாதை செய்ததாக கூறி அப்பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் ஒன்று கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அப்பகுதியிலுருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றிய லியோ நார்ட்(43) என்பவரை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, பெயிண்ட் ஊற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையினை துணியால் துடைத்து சுத்தம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அந்த சிலை மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.