வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தாண்டு இந்தியாவின் வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக பல உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டது. இந்த பருவமழையானது கடந்த ஜூன்.,1ம்தேதி கேரளாவில் துவங்கி நாட்டின் இதர மாநிலங்களில் ஜூலை 8ம் தேதி பரவியது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 25ம் தேதி முதல் படிப்படியாக இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், பீகார், ஜார்கண்ட், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று(செப்.,23)கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் இந்த பருவமழை முற்றிலுமாக விடைபெறவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3ம் வாரத்திற்கு பிறகு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.