மிக அரிதான நிகழ்வு: மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர் மற்றும் யுரேனஸை நேரில் காணலாம்
சமீபத்தில் வீனஸ் சந்திரனுக்கு மிக அருகில் வந்ததது என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை தொடர்ந்து, தற்போது இன்னும் 4 கிரகங்கள் சந்திரனுக்கு மிக அருகில் வரவுள்ளது. இப்படிப்பட்ட நிகழ்வைக் காண்பது மிகமிக அரிது என்பதால், நம் வாழ்நாளிலேயே இதை ஒருமுறை தான் காண முடியும் என்று கூறப்படுகிறது. மிகவும் அறிய ஒரு நிகழ்வாக, மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர் , யுரேனஸ் உள்ளிட்ட ஐந்து கிரகங்களை இந்தியாவில் இருந்து நேரில் காணலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. பூமியில் இருந்து மிக தொலைவில் இருக்கும் யுரேனஸை கூட டெலெஸ்கோப் இல்லாமல் சாதாரண கண்களால் நேரில் பார்க்கலாம் என்பது தான் இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
நாளை இரவு 7.30 மணி முதல் இந்த அறிய காட்சியை காண முடியும்
இந்த கிரகங்களை இந்த மாதம் முடியும் வரை தொடர்ந்து பார்க்கலாம் என்றாலும், நாளை(மார்-28) ஒருநாள் மட்டுமே இது தெளிவாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சூரியன் மறைந்த பிறகு, இந்த கிரகங்கள் எல்லாம் வரலாற்றில் கேட்டறியாத விதத்தில் நிலவுக்கு மிக அருகில் வரிசையாக நிற்கும். இருந்தாலும், இவை நேர்கோட்டில் நிற்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மாலை 7:30 மணிக்கு மேல், ஐந்து கிரகங்களும் சந்திரனுடன் வரிசைகட்டி நிற்கும். இந்த நிகழ்வின் போது, முதலில் ஜுபிடர் அடிவானத்தில் நிற்கும், அதற்கு மேலே வீனஸ், யுரேனஸ், சந்திரன் மற்றும் மார்ஸ் வரிசை மாறாமல் தெரியும். ஜுபிடர் மற்றும் மெர்குரியை சூரிய அஸ்தமனத்திற்குப் பின், 30 நிமிடங்களுக்கு மட்டுமே காண முடியும்.