
கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
மகத்தான வெற்றியுடன் தனது கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"வெறுப்பின் சந்தை மூடப்பட்டுள்ளது, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன," என்று அவர் புது டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்களுடன் உரையாடும் போது கூறினார்.
"கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது தொடரும். ஏழைகளின் பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் போராடியது," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மாநிலத்தை பிளவுபடுத்தும் போரில் காங்கிரஸ் போராடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். "கர்நாடகாவில் ஏழை மக்கள் முதலாளித்துவத்தை தோற்கடித்துள்ளனர். இந்த போரில் நாங்கள் வெறுப்புணர்வை பயன்படுத்தி போராடவில்லை" என்றும் ராகுல் காந்தி கூறி இருக்கிறார்.
details
இதுவரை 36 இடங்களில் காங்கிரஸ் வெற்றி
ஏறக்குறைய 140 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ், தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து, இந்த வருட கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக பாஜக தலைவரும் கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் (EC) அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, காங்கிரஸ் 101 இடங்களில் முன்னணியில் உள்ளது. மேலும், இதுவரை 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 137 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.