Page Loader
சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்!
மரியான் பயோடெக்க்கின் Dok1 Max இருமல் மருந்து(படம்: India Today)

சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்!

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2022
03:54 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், இந்திய நிறுவனமான மரியான் பயோடெக் தயாரித்த Dok1 Max என்ற மருந்தின் மீது ஒரு பெரும் புகார் எழுந்தது. உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்த Dok1-Max மருந்தினால் 18 குழந்தைகள் உயிரிழந்தாக அந்நாட்டு அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த மருந்தில் எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு பொருள் கலந்திருப்பதாகவும் உஸ்பெகிஸ்தான் கூறி இருந்தது. சில மாதங்களுக்கு முன், இதே போன்ற ஒரு சம்பவம் ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்தது. அப்போது, இந்திய மருந்துகளால் ஆப்பிரிக்காவில் 66 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த Dok1-Max தயாரிக்கும் நிறுவனமான மரியான் பயோடெக்கின் நொய்டா கிளையில் அனைத்து தயாரிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவு: