
வைரல் வீடியோ: 'மனி ஹெய்ஸ்ட்' கதாபாத்திரமாக மெட்ரோவில் வலம் வந்த நபர்
செய்தி முன்னோட்டம்
'மனி ஹெய்ஸ்ட்' என்ற பிரபலமான தொடரின் கதாபாத்திரம் போல் உடையணிந்து நொய்டாவில் ஒரு நபர் மெட்ரோவில் வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அது மட்டுமால்லாமல், இதே வீடியோவில் சந்திரமுகி போல் ஒருவரும் 'ஸ்க்விட் கேம்' விளையாட்டில் இருந்து தப்பி வந்தவர் போல் ஒருவரும் இருப்பதைப் பார்க்கலாம்.
சந்திரமுகி போல் உடையணித்திருப்பவர் இந்தி பட பேய் 'மஞ்சுலிக்கா' என்று கூறப்படுகிறது
திடீரென்று, மூன்று டிவி கதாபாத்திரங்களை உண்மையில் பார்த்தது போல் மெட்ரோவில் இருந்தவர்கள் திகைப்படைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இது 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் செய்த 'ரியல் டைம்' விளம்பரம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
வைரலான வீடியோ
भाई ये नोएडा है, कोई रेल देगा भूत समझके मनी हिस्ट धरा रह जाएगा 🤣 pic.twitter.com/zUaPEqCapR
— Professor ngl राजा बाबू 🥳🌈 (@GaurangBhardwa1) January 24, 2023