சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்
சமீபத்தில், ராஜஸ்தானின் நாகூரில் உள்ள குர்ச்சி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் பப்பு சவுத்ரி என்ற இளைஞர், மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார். 140 நாட்களில், 7,000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்ததை பப்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு தற்போது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். "நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். மேலும், விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும்" என்று பப்பு கூறி இருக்கிறார். சைக்கிள் பயணத்திற்கான செலவுகள் அவர் செய்யும் சில ஃப்ரீலான்சிங் வேலைகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.
சைக்கிள் பயணத்தின் போது இருந்த பிரச்சனைகள்
முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பப்பு சௌத்ரியின் பெற்றோர், அவர் இது குறித்து விளக்கம் அளித்ததும் ஒப்புக்கொண்டார்களாம். மழை, வெயில் என்று சைக்கிள் பயணத்தின் போது பல பிரச்சனைகள் இருந்ததாகவும் அதை எல்லாம் மீறி தான் தன் இலக்கை அடைந்ததாகவும் பப்பு கூறியுள்ளார். அவரது பயணம் ஜெய்ப்பூரில் முடிந்திருக்கிறது. நாகூரில் இருந்து ஜெய்ப்பூர் வரை அவர் சைக்கிளில் பயணத்திருக்கிறார். சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோளாக இருந்திருக்கிறது. பப்பு சௌத்ரி, ஒவ்வொரு மாவட்டத் தலைமையகத்திலும் இரண்டு முதல் மூன்று மரக்கன்றுகளை நட்டு, தன் கருத்தை பரப்பி இருக்கிறார்.