தனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபர் - இணையத்தில் வைரல்
தாத்தா பாட்டி என்னும் உறவு என்றுமே குழந்தைகளுக்கு ஓர் சிறப்பான உறவுதான். அவர்கள் மறைவு பேர குழந்தைகள் மனதில் ஓர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இவ்வாறு தங்கள் தாத்தா,பாட்டியை இழக்கும் பேரக்குழந்தைகள் அவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் ஏதேனும் ஒன்றினை செய்து அதனை இணையத்தில் பகிர்ந்து வருவது தற்போதைய காலகட்டத்தில் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது மறைந்த தாத்தா பாட்டிக்காக தனது கையில் பச்சை குத்திக்கொண்டு அதனை இணையத்தில் பதிவும் செய்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அவரின் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய தாத்தா பாட்டி நினைவில் வருவதோடு, கண்களை கலங்க வைக்கும் வகையில் இந்த பதிவு உள்ளது.
64,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்த நெகிழ்ச்சியானபதிவு
இதுகுறித்து அந்த நபர் ட்விட்டரில், கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குள் எனது தாதியையும் , நானியையும் இழந்தேன். அவர்கள் நினைவை நிரந்தரமாக்கிக்கொள்ள நினைத்தே நிரந்தர பச்சைக்குத்தி கொண்டேன் என்று பதிவு செய்துள்ளார். அதன் படி அவர் தனது ஒரு கையில் சூடான பானங்களான டீ போன்றவற்றை அதிகம் விரும்பும் தனது பாட்டி நினைவாக டீ குடிக்கும் மலர் கோப்பையினை பச்சை குத்தியுள்ளார். அதனை தொடர்ந்து மற்றொரு கையில், வேஷ்டி அணிந்தவாறு கையில் எதனையோ மறைத்து வைத்திருப்பது போல் காட்சியளிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றினை வரைந்துள்ளார். மேலும், பயனர் அதனை இம்லிஸ்(புளி) என விளக்கம் அளித்துள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பரவி 64,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.