Page Loader
சத்தீஸ்கரில் திருமண மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயக்கமிட்டு மரணம் 
சத்தீஸ்கரில் திருமண மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயக்கமிட்டு மரணம்

சத்தீஸ்கரில் திருமண மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயக்கமிட்டு மரணம் 

எழுதியவர் Nivetha P
May 11, 2023
05:13 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா-சத்தீஸ்கர் மாநிலம், பலோட் மாவட்டத்தின் தல்லி-ராஜரா நகரில் ஒரு திருமண நிகழ்வு நடந்தது. இதில் மணமேடையில் மணமக்களுடன் பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு மிக உற்சாகமாக திலீப் ரெளஜ்கர் என்னும் பொறியாளர் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தனது நெஞ்சினை பிடித்து கொண்டு கீழே விழுந்து மயக்கமிட்டார். இதனையடுத்து அங்கிருந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடனமாடியதால் இதய துடிப்பு அதிகரித்து ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். பரிதாபமாக உயிரிழந்த திலீப் ரெளஜ்கர் பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post