நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா?
செய்தி முன்னோட்டம்
நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகளைப் பழங்குடியினர்(எஸ்டி) பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நேற்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முதல் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரைப் பலதரப்பினரும் இந்த சாதிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வந்தனர். இந்த சமூகத்தினரின் பல வருட கோரிக்கையும் இது தான்.
இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கான மசோதாவை பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
நேற்று, இது குறித்து கலந்தாய்வு செய்த மக்களை உறுப்பினர்கள் ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.
இதே மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதன்பின்பே, இது குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக இயற்றப்படும்.
பழங்குடியினர்
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதால் என்ன பலன்?
இது போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்களில் மிக முக்கியமானவை:
1. மத்திய அரசு நலத் திட்ட உதவிகள்
2. உயர்கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகைகள்
3. வெளிநாடு சென்று படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை
4. கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு
5. சலுகை கடன்கள் மற்றும் பல
தமிழகத்தில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 27 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இதில் 0.02% மக்கள் மட்டுமே பட்டதாரிகள்.
இன்றும், இவர்கள் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன.
பட்டியலினத்தில் இந்த சாதிகள் சேர்க்கப்பட்டால் அது இவர்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும்.