மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்கப் போய் பள்ளத்தில் விழுந்த இளம் பெண் போராடி மீட்பு
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து மீட்கப்பட்டார். 29 வயதான நஸ்ரீன், மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள போர்ன் காட் பகுதிக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது பள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். மலையேற்றத்தில் இருந்த பலரும் ஒரு காவலர் உதவியுடன், பாதுகாப்பாக அவரை மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மீட்கப்பட்ட நஸ்ரீன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.