NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிரா எதிர்க்கட்சி சீட் ஒப்பந்தம் முடிவானது: தாக்கரேவின் கட்சி 21 இடங்களில் போட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிரா எதிர்க்கட்சி சீட் ஒப்பந்தம் முடிவானது: தாக்கரேவின் கட்சி 21 இடங்களில் போட்டி

    மகாராஷ்டிரா எதிர்க்கட்சி சீட் ஒப்பந்தம் முடிவானது: தாக்கரேவின் கட்சி 21 இடங்களில் போட்டி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 09, 2024
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி கூட்டணி அம்மாநிலத்தின் 48 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

    தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், இன்று காலை அக்கட்சி தலைவர்கள் இந்த தகவல்களை தெரிவித்தனர்.

    முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 21 இடங்களைப் பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 17 இடங்கள் கிடைத்துள்ளன. 10 இடங்கள் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    தாக்கரேவின் சேனா மும்பையில் உள்ள ஆறு இடங்களுள் நான்கில் போட்டியிட உள்ளது.

    வடமேற்கு, தெற்கு மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய இடங்களில் சேனா போட்டியிடும்.

    மகாராஷ்டிரா

    பிவாண்டியில் தாக்கரே சேனா தலைவர் சந்திரஹர் பாட்டீல் போட்டி

    2019 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் (அப்போது பிரிக்கப்படாத) சேனாவும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றன. அந்த இரு கட்சிகளும் அப்போது கூட்டாளிகளாக இருந்தன. ஆனால் அந்த ஆண்டின் இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வியத்தகு முறையில் அக்கட்சிகள் பிரிந்துவிட்டன.

    பிவாண்டி என்ற சர்ச்சைக்குரிய தொகுதியில் தாக்கரே சேனா தலைவர் சந்திரஹர் பாட்டீல் போட்டியிட உள்ளார். இவர் முன்னாள் மல்யுத்த வீரர் ஆவார். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜகவின் கபில் பாட்டீல் இந்த தொகுதியை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், முந்தைய இரண்டு தேர்தல்களில் பாஜகவின் சஞ்சய்காக்கா பாட்டீல் வெற்றி பெற்ற சாங்லி தொகுதியில், கபில் பாட்டீல் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா

    மகாராஷ்டிரா

    தீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ  ட்ரெண்டிங் வீடியோ
    தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு சிவசேனா
    ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம் மும்பை
    இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025