Page Loader
மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர் 
மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்

மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர் 

எழுதியவர் Nivetha P
May 05, 2023
10:23 am

செய்தி முன்னோட்டம்

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று(மே.,5)மிக விமர்சையாக அரங்கேறியது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையினைச்சூடி கொண்டு தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு வருகைத்தந்து தங்கக்குதிரையில் அமர்ந்துக்கொண்டு ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் பவனிவந்தார். அதனையடுத்து அவர் வைகையாற்றில் பச்சைநிற பட்டு உடுத்தி இறங்கினார். அப்போது அங்குக்கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா என பக்தி பரவசத்தில் கோஷமிட்டு கள்ளழகரை வணங்கினர். இதனைத்தொடர்ந்து கள்ளழகரின் மனம் குளிரவைக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வினை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவிலிருந்து அங்குக்கூடி காத்துக்கொண்டிருந்தனர். கள்ளழகர் வரும் வழிநெடுக்கிலும் பக்தர்கள் அழகர், கருப்பசாமி வேடங்களை அணிந்து மேளத்தாளத்துடன் ஆடிப்பாடி வரவேற்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post