Page Loader
விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் மதுரை ஆதீனம் 
விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் மதுரை ஆதீனம்

விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் மதுரை ஆதீனம் 

எழுதியவர் Nivetha P
Dec 28, 2023
04:59 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் இன்று(டிச.,28) காலை 6.10க்கு காலமானார். இவரது மறைவு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்து ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், 'விஜயகாந்த் இறப்பு மறைவு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் விஜயகாந்த் ஓர் நல்ல மனிதர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து தான் அவர் அரசியலில் அடியெடுத்து வைத்தார் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இரங்கல் செய்தி