Page Loader
'மெட்ராஸ் வாரம்' கொண்டாட்டம் - திருவான்மியூர் கடற்கரையில் 'மூன் லைட் சினிமா'
'மெட்ராஸ் வாரம்' கொண்டாட்டம் - திருவான்மியூர் கடற்கரையில் 'மூன் லைட் சினிமா'

'மெட்ராஸ் வாரம்' கொண்டாட்டம் - திருவான்மியூர் கடற்கரையில் 'மூன் லைட் சினிமா'

எழுதியவர் Nivetha P
Aug 28, 2023
03:56 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாநகரம், தோன்றி கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியோடு 384 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அழகிய நகரத்தின் ஆழமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன்படி, மெட்ராஸ் தினத்தை ஒட்டி, நகரத்தை சுற்றியுள்ள பல தன்னார்வல நிறுவனங்கள் பாரம்பரிய நடைப்பயணங்களை ஏற்பாடு செய்திருந்தனர். ஆங்காங்கே சென்னை வரலாறு குறித்த விரிவுரைகளும் கருத்தரங்குகள் மூலம் அளிக்கப்பட்டது. இதுபோல் ஒரு வார காலம் 'மெட்ராஸ் தினம்' என்னும் பெயரில் பல நிகழ்ச்சிகள் அரங்கேறிய நிலையில், நேற்று(ஆகஸ்ட்.,27) திருவான்மியூர் கடற்கரை பகுதியில் 'மூன் லைட் சினிமா' என்னும் திரைப்பட திரையிடல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களும் மிக உற்சாகமாக கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

திரைப்படம் திரையிடப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ