
கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜனவரி 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக, கடந்த 2019ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, மானநஷ்ட வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
card 2
மாஸ்டர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம்
இபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம்.
அடுத்ததாக, பாதுகாப்பு காரணமாக, மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் வழங்க இயலாது எனவும், அதற்கு பதிலாக, தமது வீட்டில் இருந்தபடியே சாட்சியம் வழங்க வழிவகை செய்யவேண்டுமெனவும், அதை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் எடபாடியார், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தது மட்டுமின்றி, வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.
card 3
மேல்முறையீடு செய்த மேத்யூ சாமுவேல்
எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு, உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர், எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களிக்க வேண்டும் என கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை எனக்கூறினர்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தற்போது பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால், அது நிறைவடைந்த நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க உத்தரவிட்டுள்ளனர் அமர்வு நீதிபதிகள்.