Page Loader
கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு; உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு

கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு; உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2024
01:28 pm

செய்தி முன்னோட்டம்

கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பல வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சுதந்திர கண்ணன் என்பவர் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி, கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார். விசாரணை முடிந்த நிலையில், இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

embed

கோவை தேர்தல் முடிவு

#BREAKING || கோவை தேர்தல் வழக்கு - உயர்நீதிமன்றம் மறுப்பு கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு ஆஸ்திரேலியாவில் மருத்துவராக... pic.twitter.com/bZVQLMWtRq— Thanthi TV (@ThanthiTV) April 30, 2024