Loading...
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கான அரசுப் பணி ஆணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்; அடுத்து என்ன?
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கான அரசுப் பணி ஆணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கான அரசுப் பணி ஆணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்; அடுத்து என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 27, 2026
06:54 pm

செய்தி முன்னோட்டம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பொது வேலைவாய்ப்பில் சட்டப்பூர்வ விதிமுறைகளை பின்பற்றாமல் இத்தகைய கருணைப் பணி நியமனங்களை வழங்க முடியாது எனத் தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இந்த அரசாணையை செல்லாது என அறிவித்துள்ளனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-

விதிகள்

வழக்கம் மாறாத பொதுப் பணி நியமன விதிகள்

பொது வேலைவாய்ப்புகளில் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் மற்றும் உரிய பணி நியமன விதிகளை மீறி பணி நியமன ஆணைகளை வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.

கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் நிவாரணத் தொகையோ அல்லது நிதி உதவியோ வழங்க அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாய்ப்பைப் பாதிக்கும் வகையில் விதிவிலக்காக அரசுப் பணிகளை வழங்க முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கு விசாரணை

பின்னணியும் வழக்கு விசாரணையும்

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரணமாகக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என அரசு அறிவித்து, 31 பேருக்குப் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே, விதிகளை மீறி இந்த நியமனங்கள் வழங்கப்படுவதாகக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போது அந்த அரசாணையை முற்றிலுமாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT