LOADING...
Madras Day: சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள் அறிந்துகொள்வோமா?!
சென்னை தனது 386வது ஆண்டை பெருமையுடன் கொண்டாடுகிறது

Madras Day: சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள் அறிந்துகொள்வோமா?!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 22, 2025
11:53 am

செய்தி முன்னோட்டம்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி, சென்னை நகரம் தனது 386வது ஆண்டை பெருமையுடன் கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் இந்த நாள், நகரத்தின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, வரலாற்றை பேசும் 'Madras Day' என அனுசரிக்கப்படுகிறது. சென்னையின் ஆரம்பம் 1639ஆம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனி, அப்போதைய விஜயநகர சாம்ராஜ்யத்தின் தளபதி தாமர்லா சென்னப்ப நாயக்கரிடம் இருந்து நிலம் வாங்கியதுடன் தொடங்கியது. இதில் 'சென்னை' என்ற பெயர் முதல்முறையாக விற்பனை ஒப்பந்தத்தில் பதிவாகியுள்ளதாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். அந்த இடம் பின்னர் 'சென்னை பட்டினம்' என அறியப்பட்டது.

வளர்ச்சி

நகரம் உருவான விதம்

கிழக்கிந்திய கம்பெனி, தங்கள் துறைமுகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, விஜயநகர் அரசின் கீழிருந்த இந்த இடத்தை தேர்வு செய்தது. ஜார்ஜ் கோட்டை (Fort St. George) அமைக்கப்பட்டதும், நகரத்தின் ஆட்சியும், வளர்ச்சியும் ஆரம்பமானது. நகரின் முக்கிய இடங்களின் பெயர்கள், ஆங்கில உச்சரிப்பு வசதிக்கேற்ப பின்னர் மாற்றப்பட்டன. இந்த 'madras day' நகரின் முக்கிய இடங்கள் மற்றும் அவற்றின் வரலாற்று பின்னணி பற்றி தெரிந்துகொள்வோம்.

வரலாற்றுப் பின்னணி

சென்னைப் பகுதிகளின் பெயர்கள் - வரலாற்றுப் பின்னணி:

சிந்தாதரிபேட்டை: ஆரம்பத்தில் "சின்ன தறி பேட்டை" என அழைக்கப்பட்டது. நெசவாளர்கள் வசித்த பகுதி. வண்ணாரப்பேட்டை: சலவைக்காரர்கள் வாழ்ந்த இடம். குடித்தண்ணீர் மற்றும் ஆற்றங்கரை வசதி காரணமாக பிரிட்டிஷ்காரர்கள் அவர்களை இங்கு தங்கவைத்தனர். மந்தைவெளி: பசுமை மிகுந்த நிலம். கால்நடை மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. 'மந்தை' என்றால் ஆடுகள், மாடுகள். ராயபுரம்: 'ராயர்'(அரசர்) என்பவரின் பெயரால் உருவானது. பிற்காலத்தில் 'ராயபுரம்' என மாற்றமடைந்தது. மின்ட் ஸ்ட்ரீட்: 1841-42ல் பிரிட்டிஷ் அரசு, இங்கு நாணய உற்பத்தி நிலையம் ('மின்ட்') அமைத்தது. பாரிஸ் கார்னர்: வியாபாரி தாமஸ் பாரிஸ் இங்கு தனது வணிகத்தை தொடங்கியதற்கான நினைவாக இந்த பெயர். நந்தனம்: சுதந்திரத்துக்குப் பிறகு வீடுகள் கட்டப்பட்டு, 'மரங்கள் நிறைந்த இடம்' என அறியப்பட்டதால் ராஜாஜி இந்தப் பெயரை சூட்டினார்.