
மாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்!
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் ம.பி முதலமைச்சர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.
அவரை வரவேற்க சென்ற சுற்றுலா அதிகாரிகளிடம் தனக்கு எந்த ஒரு சிறப்பு கவனிப்புகளும் வேண்டாம் என்று மறுத்த அவர், மக்களோடு மக்களாக மாமல்லபுரத்தை சுற்றி பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்.
அவரின் இந்த எளிமை, இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர்.
அந்த மாநாடு நடந்து முடிந்ததற்கு பின், மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், கூகுள் CEO சுந்தர் பிச்சையும் தன் குடும்பத்தோடு மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்.
02 Jan 2023
"மக்களோடு மக்களாக சுற்றி பார்க்க விரும்புகிறேன்"
ஆகவே முன்பு இருந்ததை விட மாமல்லபுரத்தின் பெருமை நாடெல்லாம் அதிகம் பரவி இருக்கிறது என்றே கூறலாம்.
இதனால், பிற மாநிலத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த வரிசையில், சமீபத்தில் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க மத்திய பிரதேச பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தமிழகத்திற்கு வந்தார்.
மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அப்போது அவர்களிடம் பேசிய ம.பி முதலமைச்சர், "எனக்காக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். நான் மக்களோடு மக்களாக சுற்றி பார்க்க விரும்புகிறேன்." என்று கூறி இருகிறார்.
அவர் செய்த இந்த சின்ன செயல் தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.