Page Loader
கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு
கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

எழுதியவர் Nivetha P
May 24, 2023
04:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம் கன்னியாகுமாரி. இங்கு கடல் நடுவில் உள்ள 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றை காண மிகுந்த ஆர்வத்தோடு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவ்வாறு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொள்ள தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகமானது சுற்றுலா படகுகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து வரலாற்று சின்னமாக கருதப்படும் வட்டக்கோட்டையினை கண்டுக்களிக்க கடல்மார்க்கமாக படகு சவாரி வேண்டும் என்று வெகு நாட்களாக அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

சுற்றுலா 

ரூ.8 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ள அதிநவீன படகுகள் 

இதனை ஏற்ற தமிழக அரசு கன்னியாகுமரியின் சுற்றுலா தளத்தினை மேம்படுத்தும் வகையில் வட்டக்கோட்டைக்கு சுற்றுலா படகுகளை இயக்குவதற்கு முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து சுமார் ரூ.8 கோடி செலவில் 2 அதிநவீன சொகுசு படகுகளை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வாங்கியுள்ளது. இந்த படகுகளுக்கு தாமிரபரணி மற்றும் திருவள்ளுவர் என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சாதாரண படகில் பயணம் செய்ய ஒரு ஆளுக்கு ரூ.350 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது. அதேபோல் குளிர் சாதன வசதி கொண்ட அதிநவீன சிறப்பு படகில் பயணம் செய்ய ஒரு ஆளுக்கு ரூ.450 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து, இந்த சிறப்பு வசதிகள் கொண்ட சுற்றுலா படகு சேவையினை இன்று(மே.,24)அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.