Page Loader
எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ
71 வயதான இவர், இரண்டு முறை கோவா முதல்வராக பணியாற்றி இருக்கிறார்.

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ

எழுதியவர் Sindhuja SM
Apr 11, 2023
02:44 pm

செய்தி முன்னோட்டம்

திரிணாமுல் காங்கிரஸ்(TMC) எம்பி லூயிசின்ஹோ ஃபலேரோ தனிப்பட்ட காரணத்திற்காக ராஜ்யசபா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இவரது பதவி காலம் முடிய இன்னும் 3 வருடங்கள் மற்றும் 7 மாதங்கள் உள்ளது. 71 வயதான இவர், இரண்டு முறை கோவா முதல்வராக பணியாற்றி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, 2021 செப்டம்பரில் இவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 2 மாதங்களில் இவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்தது. லூயிசின்ஹோ தனது ராஜினாமா கடிதத்தை இன்று(ஏப் 11) ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரிடம் சமர்ப்பித்தார்.

details

அடுத்த தலைவராக திரிணாமுல் கட்சி யாரை தேர்தெடுக்கும்

ஃபலேரோ ராஜினாமா செய்திருப்பதால், எஞ்சியிருக்கும் அவரது பதவிக் காலத்திற்கு அடுத்த தலைவர் தேர்தெடுக்கப்பட வேண்டும். அதனால், இந்த பதவிக்கு திரிணாமுல் கட்சி யாரை தேர்தெடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அட்டவணையை அறிவித்தவுடன், திரிணாமுல் கட்சி வேட்பாளரின் பெயரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த ஃபலேரோ, ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொறுப்பு வகித்தார். கோவா சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திரிணாமுல் அவரை ராஜ்யசபா எம்.பி ஆக்கியது. ஆனால், அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.