லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
கோவை மாவட்டத்தினை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், லாட்டரி அதிபருமான மார்ட்டினுக்கு சென்னை மற்றும் கோவையில் சொந்தமாக வீடுகள் உள்ளது. இவர் கல்வி நிலையங்கள், லாட்டரி விற்பனை போன்ற பல தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில் மார்ட்டினுக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. கடந்த 4 நாட்கள் முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 2 நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர். இவருடைய மருமகனான ஆதவ் அர்ஜுன் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ட்டினின் இருப்பு வங்கி தொகை, முதலீடு தொகை, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என சுமார் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.