தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை தொடக்க விழா மங்கள இசையுடன் துவங்கியது. இவ்விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றவுள்ளார். இதனை தொடர்ந்து வரும் 10ம் தேதி வரை பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆராதனை விழா 11ம் தேதி நடைபெறவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்ளும் இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட கர்நாடக இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்னம் கீர்த்தனைகளை பாடவுள்ளார்கள்.
சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் விழாவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதனையடுத்து 11.30 மணிக்கு சோபனா விக்னேஷ் பக்தி பாடல்களை பாடியுள்ளார். தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 இசை விழா முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தியாகராஜனின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்ட 21ம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.