
பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரில் கடந்த சில நாட்களாக தெருக்களில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
தேடுதல் நடவடிக்கையின் போது, வன அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அந்த சிறுத்தையைப் பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்தது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சிங்கசந்திரா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு சிறுத்தை முதன்முதலில் தென்பட்டது.
சிங்கசந்திரா பகுதியில் சிறுத்தையை இரண்டு தெருநாய்கள் துரத்துவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்ததை அடுத்து, அது சிறுத்தை தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
ஜக்ட்டிவ்
5 நாட்களாக நடந்த தேடுதல் வேட்டை
அந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, வனத்துறையினர் மற்றும் போலீஸார் உடனடியாக அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சிறுத்தையை பிடிக்க நான்கு கூண்டு பொறிகள் வைக்கப்பட்டன.
கடந்த அக்டோபர் 29ம் தேதி குட்லுவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அந்த சிறுத்தைப்புலி நுழைந்தது வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த அதிகாரிகள் அதை தொடர்ந்து தேடி வந்தனர்.
முதன்முதலில் காணப்பட்ட சிங்கசந்திரா பகுதி, பெங்களூருவின் பன்னர்கட்டா தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ளதால், அந்த சிறுத்தையை பிடிக்க அதிக படைகள் அங்கு குவிக்கப்பட்டன.
இந்நிலையில், பெங்களூரு குட்லு கேட் பகுதியில் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அந்த சிறுத்தை பிடிபட்டது.