மூங்கில் பாட்டில்கள்: வைரலான நாகாலாந்து அமைச்சரின் ட்வீட்
நாகாலாந்தின் உயர்கல்வி மற்றும் பழங்குடியின விவகார அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் "பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கிலில் அதீத நன்மைகள் உள்ளன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்குவதினால் இயற்கை அன்னைக்கு பெரும் நன்மை பயக்கும். மூங்கில்களின் உண்மையான செழுமையை பயன்படுத்த உழைக்கும் NE இந்தியாவைச் சேர்ந்த அனைத்து தொழில்முனைவோருக்கும் பாராட்டுக்கள்." என்று கூறியுள்ளார். அந்த பதிவின் கமெண்ட்டுகளில், பலர் இந்த பாட்டில்களை வாங்குவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அலோங் பகிர்ந்த பாட்டில்கள், மூங்கில் பொருட்களை மட்டும் தயாரிக்கும் அசாமில் உள்ள டி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதன் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.