விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது
செய்தி முன்னோட்டம்
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, தேமுதிக அலுவலகத்திலிருந்து புறப்பட்ட அவரின் உடல், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பயணக்கப்பட்ட பந்தலை வந்தடைந்தது.
காலை 6 மணி முதல், மதியம் 1 மணி வரை அங்கே சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். அதன் பின்னர், மீண்டும் தேமுதிக அலுவலகத்திற்கு வந்தடையும் அவரது உடல், இன்று மாலை 4.45 மணியளவில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்த், நேற்று காலை கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தார்.
அவருக்கு நீண்ட காலமாக உடல்நல கோளாறு இருந்ததும், அதற்காக அவர் தொடர் சிகிச்சையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு, அரசு செய்த ஏற்பாடுகள் என்ன?
#Watch | பொதுமக்கள் அஞ்சலி செலுத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? -மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்#SunNews | #RIPCaptainVijayakanth | #CaptainVijayakanth | #Vijayakanth | #விஜயகாந்த் pic.twitter.com/4fsfBRhHX8
— Sun News (@sunnewstamil) December 29, 2023