மணிப்பூர்: தேசிய நெடுஞ்சாலை முற்றுகையை தற்காலிகமாக நிறுத்தியது குக்கி சமூக குழு
கடந்த மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலம் இனக்கலவரத்தால் பாதிப்பட்டு வரும் நிலையில், மெய்த்தே சமூகத்தினர் அதிகம் வாழும் இம்பால் நகருக்கு செல்லும் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து ஒரு குக்கி சமூக குழு 12 நாள் "பொருளாதார முற்றுகை" போராட்டத்தை ஆரம்பித்தது. மணிப்பூரின் பழங்குடியின சமூகமான குக்கிகளுக்கும் அம்மாநிலத்தின் ஆதிக்க சமூகமான மெத்தே சமூகத்துக்கும் ஆறு மாதங்களுக்கும் மேலாக இனக்கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மெய்த்தே சமூகத்திற்கு கிடைக்கும் வணிக பொருட்களை கிடைக்கவிடாமல் செய்ய குக்கி சமூகம் 12 நாள் "பொருளாதார முற்றுகை" போராட்டத்தை ஆரம்பித்தது.
மாநிலம் முழுவதும் சரக்கு விநியோகம் பாதிப்பு
குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டிய பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு(COTU), நவம்பர் 15 அன்று காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளை எதிர்த்து "பொருளாதார முற்றுகை" போராட்டத்தை தொடங்கியது. நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களை இம்பாலுடன்(மணிப்பூர் தலைநகர்) இணைக்கும் இரண்டு முக்கிய பொருளாதார தேசிய நெடுஞ்சாலைகளை அந்த குழு முற்றுகையிட்டது. இதனால், மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லும் முக்கிய வணிக பொருட்கள் மற்றும் சரக்கு விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு(COTU), இந்த பொருளாதார முற்றுகையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முற்றுகையால் பழங்குடியினர்களும் பாதிக்கப்படுவதால், இதை தற்காலிமாக நிறுத்துவதாக COTU கூறியுள்ளது,