கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம்
செய்தி முன்னோட்டம்
கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக ஆண்டுதோறும் நடக்கும்.
அதன்படி இந்தாண்டும் பல இடஙக்ளில் எருதுவிடும் விழா அரங்கேறிவருகிறது.
இதனிடையே, கடந்த மாதம் 17,18தேதிகளில் வேப்பனப்பள்ளி, குமரப்பள்ளி பகுதிகளில் நடந்த இந்த விழாவில் விதிமுறைகள் சரியாக பின்பற்றாததால் சிறுவன் உள்பட 3பேர் மாடு முட்டி இறந்தனர்.
இதனால் இது போன்ற விழாக்களுக்கு முன்னதாகவே அனுமதி பெறவேண்டும் என்பது கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஓசூர் அருகே சின்னத்திருப்பதி கோயில் திருவிழாவில் எருதுவிடும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எவ்வித அனுமதியும் பெறாதநிலையில் நேற்று(பிப்.,2) காவல்துறை அதிகாரிகள் அங்குசென்று விழாவை நிறுத்த அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி. விளக்கம்
பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர்
இப்போராட்டம் காரணமாக அம்மாவட்ட ஆட்சியர் விழாவிற்கு அனுமதியளித்தார்.
எனினும் அவர்கள் கிருஷ்ணகிரி முழுவதும் எருதுவிடும் விழா நடத்த அனுமதி வேண்டும் என்றுகூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து கூட்டத்தை கலைக்க தடியடி நடத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
பின்னர் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட ஓர் இளைஞரை அதிகாரி ஒருவர் பூட்ஸ் காலால் உதைக்கும் வீடியோ திடீரென சமூகவலைத்தளங்களில் பரவியது.
தற்போது இதுகுறித்து கிருஷ்ணகிரி எஸ்.பி.சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, அந்த இளைஞர் பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.
இதனை விசாரிக்கும் பொழுது, அவர் தப்பிச்செல்ல முயன்றதால் பூட்ஸ் காலால் எட்டி உதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.