
கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம்
செய்தி முன்னோட்டம்
கோழிக்கோடு ரயில் தீ விபத்தில் நேற்று கைதான சந்தேக நபர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் மர்ம நபர் ஒருவர், பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
சம்பவம் அறிந்து விரைந்த போலீஸார் ரயில் பெட்டியில் மர்ம நபர் விட்டு சென்ற பெட்ரோல் பாட்டில், மொபைல் போன், டைரி உள்ளிட்ட பொருட்களை கண்டறிந்தனர்.
அந்த பொருட்களை ஆய்வு செய்ததில் பயணிகள் மீது தீ வைத்தது வடமாநிலத்தை சேர்ந்த ஷாருக் ஷைபி என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஷாருக் ஷைபி மஹாராஷ்டிராவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்தியா
ஷாருக் ஷைபியின் நண்பர் யார் என்பது இன்னும் தெரியவில்லை
கைதான ஷாருக் ஷைபியை கேரளாவுக்கு அழைத்து வந்த போலீஸ் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், விபத்து நடக்கும் போது ஷாருக் ஷைபியுடன் அவரது நண்பர் ஒருவர் இருந்தார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
ஷாருக் ஷைபியின் நண்பர் தான் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்ற சொன்னதாக ஷாருக் ஷைபி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ரயில் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களை பயமுறுத்த அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றியதாகவும் ஷாருக் ஷைபி கூறியுள்ளார்.
ஷாருக் ஷைபியின் நண்பர் யார், அவர் ஏன் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்ற சொன்னார் என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
அது குறித்து போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.