Page Loader
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? வெளியானது செயல்முறை விளக்கம் 
இதற்கான பிரத்தியேக இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? வெளியானது செயல்முறை விளக்கம் 

எழுதியவர் Venkatalakshmi V
May 06, 2024
10:51 am

செய்தி முன்னோட்டம்

கடந்த வாரம், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என நீதிமன்றமும், அம்மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்த நிலையில், இந்த இ பாஸ் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை விளக்கம் வெளியாகியள்ளது. இதற்கான பிரத்தியேக இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் இதோ: https://epass.tnega.org/ இந்த இணையதள முகவரியில் இன்று காலை முதல் விண்ணப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த இணையதளத்திற்கு, சென்றவுடன் உங்கள் குடியுரிமை பற்றிய தேர்வை செய்யவேண்டும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர் பெயர், வருகையின் காரணம், வாகன பதிவு எண், பயணிகள் எண்ணிக்கை, பயணிக்கும் வாகனத்தின் விவரமும் பதிவு செய்யபட வேண்டும்.

embed

இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

#WATCH | உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான மாதிரி காணொளி வெளியீடு#SunNews | #EPass | #Nilgiris | #Kodaikanal pic.twitter.com/zTM6oE6Hw9— Sun News (@sunnewstamil) May 6, 2024