திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ரெங்கநாராயணபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜா, இவருடைய மகன்(24). இவர் சுமிகா(19) என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அண்மையில் சென்னைக்கு வந்து பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி சென்னையில் வாழ்ந்துவந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் ஊருக்கு சென்று முருகன் குடும்பத்தோடு இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்நிலையில் சுமிகாவின் தந்தை முருகேசன், தாய் பத்மா, உள்ளிட்ட 12 பேர் முருகன் வீட்டிற்கு வந்து, அங்கிருந்த சுமிகாவை ஆட்டோவில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து முருகன் புகார் செய்ததையடுத்து கூடங்குளம் போலீசார் அந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த கும்பலில் இருந்த 8 பேரை கைது செய்துள்ளது.
சுமிகா பெற்றோரை தீவிரமாக தேடிவரும் காவல்துறை
இதனைதொடர்ந்து சுமிகாவின் தாயார், தந்தை, அவருடைய தாத்தா உள்ளிட்ட 4பேரை தீவிரமாக தேடிவருகிறார்கள். இதேபோல ஓர் சம்பவம் அண்மையில் அரங்கேறியது. தென்காசி கொட்டாங்குளம் பகுதியைச்சேர்ந்த வினீத் சென்னையில் பணியாற்றிவந்துள்ளார். அதே மாவட்டத்தை சேர்ந்த நவீன்பட்டேல் என்பவரது மகள் கிருத்திகாவும் படிப்பதற்காக குஜராத்தில் இருந்துவந்து சென்னையில் படித்துவந்துள்ளார். இந்நிலையில் வினீத்துக்கும், கிருத்திகாவுக்கும் காதல்ஏற்பட, கடந்த டிசம்பர்மாதம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஜனவரியில் வினீத் வீட்டிலிருந்த கிருத்திகா தனது பெற்றோரால் கடத்தப்பட்டதாக வினீத் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்த விசாரணை நடந்துகொண்டிருக்கையில், கிருத்திகா ஓர் வீடியோப்பதிவினை வெளியிட்டார். அதில் அவர் தனது உறவினர் ஒருவரை அக்டோபர் மாதமே திருமணம் செய்துகொண்டதாகவும், தனது கணவன் மற்றும் குடும்பத்துடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறி அனைவரையும் அதிரவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.