நவம்பர் 1-19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம்: காலிஸ்தானி பயங்கரவாதி பண்ணுனின் புதிய மிரட்டல்
நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணூன் மிரட்டல் விடுத்துள்ளார். அவர், கடந்த ஆண்டும், இதேபோன்ற அச்சுறுத்தலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவிலும், அமெரிக்காவிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நீதிக்கான சீக்கியர்களின்(SFJ) நிறுவனர் பண்ணூன், "சீக்கிய இனப்படுகொலையின் 40வது ஆண்டு விழா" காரணமாக, ஏர் இந்தியா விமானத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறினார். இந்தியாவில் பல விமான நிறுவனங்களுக்கு வெளியான சாத்தியமான குண்டுவெடிப்பு மிரட்டல்களுக்கு இடையே பண்ணூனின் அச்சுறுத்தல் வந்துள்ளது. எனினும் இதுவரை வெளியான வெடிகுண்டு மிரட்டல் அனைத்தும் புரளிகளாக மாறியது. பண்ணூன், தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ஜூலை 2020 முதல் உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக வகைப்படுத்துள்ளார்.
Twitter Post
பிரிவினைவாதத்தை தூண்டுவதற்காக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி பண்ணூன்
பிரிவினைவாதத்தை தூண்டுவதற்காக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி பண்ணுன் தனி இறையாண்மை கொண்ட சீக்கிய தேசத்துக்காக வாதிடும் SFJ என்ற குழுவை வழிநடத்தும் பண்ணூன், ஜூலை 2020 முதல், தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில் உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஒரு வருடம் முன்பு, "தேச விரோத மற்றும் நாசகார" நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக SFJ இயக்கத்தை "சட்டவிரோத சங்கம்" என்று இந்தியா தடை செய்தது. மற்றொரு வளர்ச்சியில், பண்ணுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில், அக்டோபர் 17 அன்று, amerஇந்தியாவின் உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) முன்னாள் அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. எனினும் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.