உடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் இருக்கும் கேரளா
இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், அதிக உடல் உறுப்பு தானம் செய்யும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அரசின் தரவுகளின்படி, கேரளாவில் சுமார் 1.30 லட்சம் பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். டெல்லியில் சுமார் 58,000 பேர் உடல் உறுப்பு தானத்திற்கு எழுதி வைத்துள்ளனர். 49,000 உடல் உறுப்பு தானங்களுடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு மிகக் குறைவான உறுப்பு தான விகிதங்களைக்(0.4) கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் குரோஷியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இது ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 40-45 ஆக உள்ளது.
உயிருள்ள நன்கொடையாளர்கள் இறந்தவர்களை விட அதிகமாக தானம் செய்கிறார்கள்
பீகாரில் 5,629 பேரும், சண்டிகரில் 6,186 பேரும், ஹரியானாவில் 18,522 பேரும் உடல் உறுப்பு தானம் வழங்க பதிவு செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், உயிருள்ள நன்கொடையாளர்களால் சுமார் 6,459 உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாகவும், இறந்த நன்கொடையாளர்களால் 1,060 உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாகவும் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில், 70-80% க்கும் அதிகமான உறுப்புகள் உயிருள்ள நன்கொடையாளர்களால் தான் தானம் செய்யப்படுகின்றன. ஏனெனில் மிகக் குறைவான நபர்கள் மட்டுமே மரணத்திற்குப் பிந்தைய தானங்களைத் தேர்வு செய்கின்றனர்.