Page Loader
கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: 175 பேர் பாதிப்பு
கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்

கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: 175 பேர் பாதிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2024
09:10 am

செய்தி முன்னோட்டம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதால் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 175 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதால், உள்ளூர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தபடி, 126 பேர் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர், 104 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மாவட்டத்தில் 5 வார்டுகளில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பிற கூட்டங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் காய்ச்சலின் பரவலைக் கட்டுப்படுத்த முககவசம் அணிய வேண்டும் எனவும், கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

குழுக்கள் 

சோதனைக்குழுக்கள் அமைப்பு 

மக்களிடையே பரிசோதனை செய்ய 66 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுக்கள் நோய் பரவலின் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளன. மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், சுகாதார பரிசோதனைகளில் உதவவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கடைகளை மாலை 7 மணிக்கு அடைக்கும்படி மாவட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் இங்குள்ள பள்ளி, கல்லூரிகள், சினிமாதியேட்டர்கள், மதரஸாக்கள், அங்கன்வாடிகள், டியூஷன் மையங்கள் ஆகியவற்றை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.