Page Loader
கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு
ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு

எழுதியவர் Sindhuja SM
Apr 03, 2023
01:02 pm

செய்தி முன்னோட்டம்

கேரள மாநிலம் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக பயணியை ஒருவர் தீ வைத்து எரித்ததில் 8 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ரயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூவரும், தீ விபத்திற்குப் பிறகு ரயிலில் இருந்து குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக, அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா

பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார்

திடீரென்று இப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் ஏற்பட்டதால், பயணிகள் அவசர சங்கிலியை இழுத்தது ரயிலை நிறுத்தி இருக்கின்றனர். அந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி கொண்ட அடையாளம் காணப்படாத சந்தேக நபர் தப்பிச் சென்றார். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்த மற்ற பயணிகள் தீயை அணைத்தனர். பின், இச்சம்பவத்தில் தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர் விட்டு சென்ற பையில் இருந்து இந்தி மற்றும் ஆங்கில குறிப்புக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த குறிப்புகள் இருந்த டைரியில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது பீதியை கிளப்பி இருக்கிறது