
கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
கேரளா, கொல்லம்-பூயபள்ளி பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி.
இவருடைய சகோதரன் ஜானதன்(8).
இவர்கள் இருவரும் நேற்று(நவ.,27)மாலை ட்யூஷன் முடிந்து வீட்டிற்கு நடந்துச்சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களை பின்தொடர்ந்து வந்த வெள்ளைநிற கார் அச்சிறுமியின் சகோதரனை தள்ளிவிட்டு, சிறுமியை காரில் கடத்தி சென்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தாயாருக்கு மொபைல் போனில் அழைப்பு விடுத்த கடத்தல் கும்பல், ரூ.5-லட்சம் கொடுத்தால் தனது மகளை பத்திரமாக திருப்பியனுப்புவதாக கூறியுள்ளனர்.
பின்னர் 2வது-முறை ஆடியோ பதிவு அனுப்பிய கடத்தல் கும்பல், சிறுமி சிறு காயம் கூட இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும், செவ்வாய்க்கிழமை(இன்று-நவ.,28)காலை ரூ.10 லட்சம் கொடுத்தால் சிறுமி பத்திரமாக வீடு திரும்புவார் என்றும் மிரட்டியுள்ளனர்.
கடத்தல்
சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிசிடிவி பதிவுகள் ஆய்வு
இந்நிலையில் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தனது விசாரணையினை துவங்கியுள்ளது.
கடத்தப்பட்ட சிறுமியின் சகோதரன் அளித்த தகவல்படி, சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒரு பெண் உள்பட 4 பேர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் சிறுமியை தேடும் பணி நடந்து வருகிறது என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், சிறுமியை தேடும் பணியினை மேலும் தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, சிறுமி கடத்தல் விவகாரம் குறித்த எவ்வித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.