
நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், அந்த சிறுவனுக்கு இன்று காலை 10.50 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை பலனில்லாமல் அவன் உயிரிழந்தான்.
"அவன் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தான். இன்று காலை அவனுக்கு சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிட்டது. அதன் பிறகு, அவனுக்கு ஒரு பெரிய மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவனை காப்பாற்ற முடியவில்லை. அவன் இன்று காலை 11.30 மணியளவில் காலமானான்" என்று அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறினார்.
இந்தியா
மலப்புரம் மக்கள் முககவசங்களை அணிந்துகொள்ள உத்தரவு
அந்த சிறுவனின் இறுதிச் சடங்குகள் மருத்துவ நெறிமுறைகளின்படி செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கேரள சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு பேர், "அதிக ஆபத்து பிரிவின்" கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாண்டிக்காடு, கேரளாவில் நிபா வைரஸின் மையமாக உள்ளது.
எனவே, மலப்புரம் மற்றும் அதற்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள மக்கள் பொது இடங்களில் முககவசங்களை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்ப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மாநில அரசு கேட்டுக் கொண்டது.