வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள்
கேரளாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றோர்கள் அதிகமானதால் 100-க்கும் மேற்பட்ட பங்களாக்கள் ஆளில்லாமல் கிடைக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் பலரும் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யவேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். அங்கு சென்று சம்பாரித்து குடும்பத்தை காப்பாற்றி வருவார்கள். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பெரியதாகிவிட்டதால் சர்வ சாதரணமாக வெளிநாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிலும், இந்தியாவில் கேரளாவில் தான் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் அங்கு சென்ற பின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அழைத்து சென்று அங்கேயே வேலை வாங்கி கொடுத்துவிடுகிறார்கள். இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் பகுதியில் உள்ள கைப்புழா என்ற கிராமத்தில் இருந்து வெளிநாட்டு சென்றோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
ஆளில்லாமல் காலியாக கிடக்கும் பங்களாக்கள் - காரணம் என்ன?
இதற்கு காரணமாகவும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் 1950 ஆண்டில் போது பல வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் தங்கள் உறவினர்களையும் வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்படி தொடர்ந்து அவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் மதத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து சென்று வேலை வாங்கி கொடுத்துள்ளனர். இதனிடையே இப்படி குடும்பத்தோடு சென்றுவிடுவதால், அவர்களின் சொந்த வீடு மற்றும் பங்களாக்கள் வசிக்க ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கேட்டாயம் பகுதியில், கணக்கெடுப்பின் போது 11 சதவீத வீடுகள் பூட்டிக்கிடந்துள்ளன. இத்தகவல் குறித்து முதியோர் இல்லம் நடத்து பிஜி அபிரகாம் என்பவர் வருத்ததை தெரிவித்து அவரது பெற்றோர்கள் தனியாக வசித்து வரும் நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.