Page Loader
அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை
அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என தகவல்

அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை

எழுதியவர் Nivetha P
Nov 02, 2023
02:28 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி, 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுபானம் விற்பதற்கான உரிமம் 849-சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டதையடுத்து, சி.பி.ஐ.,அதிகாரிகள் துணைமுதல்வரான மணீஷ் சிசோடியாவிற்கு சொந்தமான 21 இடங்களில் சோதனையிட்டனர். இதனையடுத்து மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு தற்போது திஹார் சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து பலமுறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. இத்தீர்ப்பினை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதன்மீதான விசாரணையில், 'ரூ.338 கோடி பணம் கைமாறியதற்கான பூர்வாங்க ஆதாரம் உள்ளது. மணீஷ் சிசோடியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்க அதிக வாய்ப்புள்ளது' என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

கடிதம் 

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆஜராகவில்லை என்று கடிதம் 

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்தது. மேலும் இதன் விசாரணையினை விரைந்து 6-8 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என்றும், விசாரணை தாமதமாகும் பட்சத்தில், 3 மாதங்களுக்குக்கு பிறகு இவர் மீண்டும் ஜாமீன் மனு கோரலாம் என்றும் கூறி உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு சம்மந்தமாக நவம்பர் 2ம்.,தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றுக்கூறி அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்'க்கு கடந்த 30ம்.,தேதி சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் இன்று மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்கிடையே, "5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். வேறொரு தேதியினை விசாரணைக்காக ஒதுக்கவேண்டும்" என்று கெஜ்ரிவால் தரப்பில் அமலாக்கத்துறைக்கு ஓர் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.