Page Loader
மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது
கே.கவிதாவிடம் டிசம்பர் 12ஆம் தேதி சிபிஐ குழு 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது

எழுதியவர் Sindhuja SM
Feb 08, 2023
10:37 am

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிபிஐயால் தேசிய தலைநகருக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகள் கே.கவிதாவுடன் பணிபுரிந்தவர் ஆவார். இந்த வழக்கில் "தெற்கு குழு" சார்பில் ஆஜரான கே.கவிதாவின் முன்னாள் தணிக்கையாளரான புச்சி பாபு நேற்று(பிப் 7) மாலை கைது செய்யப்பட்டார். அவர் சரியாக ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக கே.கவிதாவிடம் டிசம்பர் 12ஆம் தேதி சிபிஐ குழு 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. நிதிக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகம், மதுபானக் கொள்கை வழக்கில் கிக்பேக் மூலம் பயனடைந்த தெற்கு குழுவில் கே.கவிதாவும் இருந்ததாக குற்றம்சாட்டியது.

டெல்லி

மதுபான ஊழலில் சிக்கியவர்கள்

பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான தலைநகரின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதையடுத்து, இந்தக் கொள்கையை ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு திரும்பப் பெற்றது. "தெற்கு குழு" எனப்படும் லாபியின் கிக்பேக் மூலம் டெல்லியின் மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ கூறியுள்ளன. அதன் கீழ், உரிமக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது/குறைக்கப்பட்டது என்றும் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற சலுகைகள் நீட்டிக்கப்பட்டன என்றும் அவை கூறியுள்ளன. இந்தக் குழுவில் தெலங்கானாவின் ஆளும் பாரத ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த கவிதா, ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் YSR காங்கிரஸ் எம்பியான மகுண்டா சீனிவாசலு ரெட்டி மற்றும் அரபிந்தோ பார்மாவைச் சேர்ந்த சரத் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.