'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம்
செய்தி முன்னோட்டம்
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, இன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பாலஸ்தீனத்தின் கதிதான் காஷ்மீருக்கும் ஏற்படும் என்று கூறினார்.
கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
அந்த சம்பவம் குறித்து பேசிய பரூக் அப்துல்லா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலால் குண்டுவீசி தாக்கப்படும் காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட கதியையே நாமும் சந்திக்க நேரிடும் என்று அவர் கூறினார்.
டவ்க்ட்ஜ்ல்
பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலின் விவரங்கள்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை(டிச.,21) ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த ஒருமாத காலத்திற்குள் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களுள் இது 2வது-தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3:45 மணிக்கு தாத்யார் மோர் அருகே உள்ள ஒரு வளைவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வாகனங்கள் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி(PAFF) பொறுப்பேற்றது.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து பேசிய பரூக் அப்துல்லா தன் கருத்தை தெரிவித்துள்ளார்.