Page Loader
இணையத்தில் விற்கப்பட்ட கருணாநிதி நினைவு நாணயம்; ஒரே நாளில் விற்றுப்போனதாக தகவல்
நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங்

இணையத்தில் விற்கப்பட்ட கருணாநிதி நினைவு நாணயம்; ஒரே நாளில் விற்றுப்போனதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2024
10:21 am

செய்தி முன்னோட்டம்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டு, அவை இணையதளத்தில் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளதால் பெரும் கவனம் பெற்றுள்ளது. மத்திய அரசு கடந்த மாதம் 18-ஆம் தேதி 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் அதனை பெற்றுக்கொண்டார். இந்த நாணயங்கள் புழக்கத்தில் இல்லாததால், அறிவாலயத்தில் ரூ. 10,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தி.மு.க. நிர்வாகிகள் அவற்றைப் பெற ஆர்வமாக இருந்ததால், அவை விரைவில் முடிந்து விட்டன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விற்பனை

இணையத்தில் விற்பனை

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் இணையதளத்தில் 1,500 நாணயங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்து விட்டன என ஒரு ஆதாரம் தெரிவித்ததாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அடுத்த வாரம் மீண்டும் விற்பனைக்கு வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாணயங்கள், இணையதளத்தில் 100 ரூபாய் நாணயங்கள் ரூ. 4,180 மற்றும் ரூ. 4,470 விலையில் விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.