Page Loader
கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன 
காங்கிரஸ் அமைச்சரின் கருத்துகளை இந்து சமய ஆர்வலர்கள் விமரிசித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன 

எழுதியவர் Sindhuja SM
Jun 06, 2023
05:02 pm

செய்தி முன்னோட்டம்

எருமை மாடுகளை வெட்டலாம் என்றால், பசுக்களை ஏன் வெட்டக்கூடாது என்று கேள்வி எழுப்பிய கர்நாடக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.வெங்கடேஷுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் இன்று(ஜூன் 6) மாடுகளுடன் போராட்டம் நடத்தினர். இன்று கர்நாடக பாஜகவினர் பசுக்களுக்கு பொட்டு வைத்து, மாலை அலங்காரம் செய்து, அவைகளுக்கு வாழைப்பழம் ஊட்டி போராட்டம் நடத்தினர். பசு வதை தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் கர்நாடகா வதை தடுப்பு மற்றும் பசுக்களைப் பாதுகாத்தல் சட்டத்தை தனது அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று அமைச்சர் கே.வெங்கடேஷு கடந்த சனிக்கிழமை மைசூருவில் வைத்து கூறினார். இதனையடுத்து, அவருக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

details

காங்கிரஸ் அமைச்சரின் கருத்துகளை  இந்து சமய ஆர்வலர்கள் விமரிசித்து வருகின்றனர்

பாஜக ஆட்சியில் இருந்த போது, பசுக்களை வெட்டக்கூடாது, எருமை மாடுகளை வெட்டலாம் என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. இந்த சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அமைச்சர் கே.வெங்கடேஷுக்கு எதிராக தற்போது பாஜகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், இந்த காங்கிரஸ் அமைச்சரின் கருத்துகளை இந்து சமய ஆர்வலர்கள் விமரிசித்து வருகின்றனர். காங்கிரஸ் அரசாங்கம் பசுவதைத் தடைச் சட்டத்தை திரும்பப்பெற்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜகவினர் எச்சரித்துள்ளனர். பெங்களூரு, மைசூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் பாஜக இன்று போராட்டம் நடத்தியது. "கர்நாடகா பசு வதை மற்றும் பசு பாதுகாப்பு சட்டம்(1964) 12 வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளை விவசாயத்திற்கு தகுதியற்றவை என்று குறிப்பிடுகிறது." என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கூறியிருந்தார்.