Page Loader
பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி 
மே 17, 2022 அன்று கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி 

எழுதியவர் Sindhuja SM
Jun 15, 2023
05:37 pm

செய்தி முன்னோட்டம்

பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு இது தொடர்பான மசோதாவை வரும் ஜூலை மாதம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இருக்கிறது. "மதமாற்றத் தடை மசோதா குறித்து அமைச்சரவை விவாதித்தது. 2022இல் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். ஜூலை-3ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடரில் இது தாக்கல் செய்யப்படும்." என்று சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார். 'வற்புறுத்தல்', 'பலவந்தம்', 'மோசடி', மற்றும் 'கூட்டு மதமாற்றம்' ஆகியவற்றின் காரணமாக மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் இந்த மசோதா, டிசம்பர்-2021இல் கர்நாடக சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கோஞ்

இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் 

இதையடுத்து, இந்த மசோதாவை அமல்படுத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. மே 17, 2022 அன்று கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதற்கு பிறகு, நடைமுறையில் இருந்த அவசரச் சட்டத்திற்குப் பதிலாக செப்டம்பர் மாதம் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கிறிஸ்தவ சமூக தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆண்டு மே மாதம் தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ், தற்போது இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.