Page Loader
கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது
நடிகர் நாகபூஷன் கன்னட திரைப்படங்களில் அவரது நகைச்சுவை கதாபாத்திரங்களுக்காக அறியப்பட்டவர்.

கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது

எழுதியவர் Srinath r
Oct 01, 2023
04:45 pm

செய்தி முன்னோட்டம்

கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கன்னட நடிகர் நாகபூஷன் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் பெங்களூரில் வசந்தபுரா முக்கிய சாலையில் நேற்று இரவு(செப்டம்பர் 30) நடந்துள்ளது. உத்தரஹள்ளி பகுதியில் இருந்து கோணங்குண்டே கிராஸ் சாலையில் காரை இயக்கி வந்த நாகபூஷன், நடைபாதையில் சென்ற தம்பதி மீது மோதிவிட்டு மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கணவர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காரை பறிமுதல் செய்து நாகபூஷனை கைது செய்தனர். நடிகர் நாகபூஷன் காரை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

குமாரசாமி லேஅவுட் போலீசார் வழக்கு பதிந்து நாகபூசனை கைது செய்தனர்